இது செம ஆஃபர்.. ஆனா மார்ச் 31 வரை தான்.. அதிரடியாக பைக் விலையை குறைத்த Bounce Infinity – முழு விவரம்!

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்திய சந்தையில் தனது மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், இந்த இரண்டு ஆண்டு கால காலத்தில் சுமார் 8, 570 வண்டிகளை விற்றுள்ளது. இந்த நிறுவனம் தனது E 1 பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் சுமார் 1.13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது

பௌன்ஸ் இன்ஃபினிட்டி E1 என்பது மாற்றத்தக்க பேட்டரி பேக்கைப் பயன்படுத்தும் ஒரே இந்திய இ-ஸ்கூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வண்டி 2kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது, இது 2.2kW ஹப்-மவுண்டட் மோட்டாரை இயக்குகிறது மற்றும் மணிக்கு 65kph வேகத்தில் செல்லக்கூடிய திறன்கொண்ட வண்டியாகும்.

இந்த நிலையில் வண்டியின் விற்பனையை மேலும் அதிகரிக்க இப்பொது 89,999 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றது. ஆனால் இந்த சலுகை வருகின்ற மார்ச் மாதம் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம். நிச்சயம் இந்த விலை குறைப்பு இந்த வண்டியை வாங்க பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆனால் E1 + போல அதே பேட்டரி திறன் கொண்ட Ola S1 Xஐ விட, Bounce Infinity E1 + சுமார் 10,000 ரூபாய் அதிகமான விலையில் விற்பனையாகுகின்றது. மேலும் பெரிய 3kWh பேட்டரியைப் பெறும் S1 Xக்கு இணையாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது S1 X 84,999 என்ற விலையில் (மார்ச் 1 வரை) விற்பனையை செய்யப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *