‘இந்த’ ஒரு ஜூஸ் போதும்! உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும்..!
ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் பலருக்கு டீ, காபி குடிக்காவிட்டால் வேலை எதுவும் செய்ய ஓடாது. ஆனால் இவை உடல் நலத்திற்கு கேடு. மிகச் சிலரே மற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானங்களை குடிக்கிறார்கள். மூலிகை நீர் மற்றும் மசாலா நீர் ஆகியவை முக்கிய ஆரோக்கிய பானங்களில் ஒன்று.
அந்தவகையில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த பானங்களில் ஒன்றுதான் பூசணி ஜூஸ். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..
பூசணிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது. எனவே, இதன் ஜூஸ் நம் உடலில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும் இது தாகத்தைத் தணிக்கிறது. சாம்பல் பூசணியில் தண்ணீர் அதிகம் உள்ளதால், இது உங்களை நீரிழப்புக்கு ஆளாவதைத் தடுக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இதன் ஜூஸை குடித்து வந்தால், விரைவில் உடல் எடையை குறைக்கலாம்.
அதுபோல், காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்து வந்தால் செரிமானம் சீராகும். மேலும் வயிற்றில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
குறிப்பாக, நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் செரிமான நொதிகளை வெளியிடுகிறது. மேலும் இது உங்கள் pH அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது அமிலத்தன்மை மற்றும் புண்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
பூசணி ஜூஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இதில் வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. அத்தியாவசிய வைட்டமின்கள் நிரம்பிய இந்த ஜூஸ் இரத்த சர்க்கரையை குறைக்கும் சிறந்த முகவராக செயல்படுகிறது.
மேலும், சுவாசக் கோளாறுகளைத் தடுப்பதில் இந்த ஜூன் முக்கியப் பங்கு வகிக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவத்தில் பூசணி ஜூஸ் பயன்படுத்தப்படுகிறது.
கோடைகால உணவுகளில் இந்த காயை தொடர்ந்து சாப்பிடுவதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் அது உடலுக்கு குளிர்ச்சி தரும்.