இளமையை தக்க வைக்க மஞ்சளை இப்படி பயன்படுத்தலாம்! முதுமையை தள்ளிப்போட சூப்பர் வழி!

இயற்கை ஆக்ஸிஜனேற்றியான மஞ்சள், சரும பராமரிப்புக்கு அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. சரும பராமரிப்பு பொருட்களில் மஞ்சள் முக்கியமானதாக இடம் பெற்றுள்ளது. இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள குக்ர்குமின் தான். இது, சருமத்தை ஆரோக்கியமாக்குவது முதல் அழகாக்குவது வரை பல வேலைகளைச் செய்கிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட மஞ்சள், சருமத்தில் ஏற்படும் அரிப்பு வீக்கம் மர்றும் எரிச்சலைப் போக்குகிறது. மஞ்சளைத் தொடர்ந்து பான்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை இயற்கையாக ஒளிரச் செய்யும் மஞ்சளின் பண்புகள், கரும்புள்ளிகளை மறைப்பதற்கும், சருமத்தின் நிறத்தை சமன் செய்வதற்கும் உதவுவதுடன் பளிச் சருமத்தை கொடுத்து அழகை மேம்படுத்துகிறது.

மஞ்சள் பயன்படுத்துவதால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

முகப்பரு வராது
முகப்பரு என்பது அனைவருக்கும் ஏற்படும் மிகவும் பொதுவான ஆனால், சிக்க்லான சருமப் பிரச்சனையாகும், சிறப்பு கவனிப்பு தேவைப்படும் முகப்பருவை சீராக்க பல்வேறு அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் கிடைத்தாலும், இயற்கையான மூலப்பொருளைக் கொண்டு சிகிச்சையளிப்பது தான் நல்லது. அதற்கு மஞ்சள் மற்றும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உதவும். பருக்கள் மற்றும் முகத்தில் தோன்றும் சூட்டு கொப்புளங்களை எதிர்த்துப் போராடுவதில் திறம்பட செயலாற்றும் மஞ்சள், பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தழும்புகளை மங்க வைக்கும் மஞ்சள்
சருமத்தில் ஏற்படும் காயங்கள், தழும்புகளாக மாறாமல் பாதுகாப்பது மஞ்சளின் தனிச்சிறப்பாகும். சருமத்தில் ஆழமாக ஊடுருவி, சவ்வு செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் மஞ்சள், சருமத்தை பளபளப்பாக்குகிறது. மஞ்சளுடன் ஏதேனும் எண்ணெய் கலந்து, காயங்களின் மீது பயன்படுத்தினால் தழும்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

முதுமையை தள்ளிப்போடும் மஞ்சள்

முதுமையை வரவேற்க யாரும் தயாராக இருப்பதில்லை. இளமையை தக்க வைத்துக் கொண்டு, முதுமையை தள்ளிப்போட மஞ்சள் உதவும். சருமத்தை பாதிக்கும் கடுமையான புற ஊதாக் கதிர்கள், வயதான தோற்றத்தை விரைவில் கொண்டு வந்துவிடுகிறது. மஞ்சள் பூசினால், புற ஊதா கதிர்கள் சருமத்தைப் பாதிக்காமல் பாதுகாக்கலாம். மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் இயற்கையான எண்ணெய் பசையை தக்க வைப்பதால் இளமையை தக்க வைக்கலாம்.

எண்ணெய் சருமத்திற்கு மஞ்சள்

எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு மஞ்சள் அருமருந்து. உடலில் உள்ள செபாசியஸ் சுரப்பிகள் மூலம் சரும துவாரத்தின் வழியாக எண்ணெய் உற்பத்தியாகிறது. சருமத்தில் வெளியே தெரியும் எண்ணெய் பசை முகத்தின் அழகை கெடுக்கிறது. சருமத்தில் வெளியாகும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த மஞ்சளை பயன்படுத்தலாம்.

தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் முடிகளை யாரும் விரும்புவதில்லை. அதை அகற்றுவதற்கு எளிதான மற்றும் முற்றிலும் இயற்கையான தீர்வு மஞ்சளை பயன்படுத்துவது தான். மஞ்சளுடன் காய்ச்சாத பச்சை பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து தேய்த்து விட்டால், முகத்தில் தேவையில்லாத முடிகள் அகல்வதுடன், முகத்தின் பிரகாசமும் கூடும்.

சரும பராமரிப்புக்கு மஞ்சளை எப்படி பயன்படுத்துவது

ஒரு மென்மையான க்ளென்சருடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, உங்கள் முகத்தில் மசாஜ் செய்யவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.மஞ்சள் தூள் தேன், தயிர் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து பூசி காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
வழக்கமாக இரவில் பயன்படுத்தும் க்ரீம் அல்லது மாய்ஸ்சரைசரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைக் கலந்து பூசவும். இது சருமத்தைப் பளபளப்பாக்கி முதுமையை தள்ளிப்போடும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *