இது வெறும் வதந்தியே… மேரி கோம் ஓய்வு என்பது உண்மையில்லை..!

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் வயது காரணமாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேரி கோம் கூறுகையில், “இன்னும் பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உள்ளது. ஆனால் வயது வரம்பு முடிவடைந்ததால் என்னால் எந்தவிதமான போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது. நான் இன்னும் அதிக போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இருந்த போதிலும் வயது வரம்பு காரணமாக கட்டாய ஓய்வை அறிவிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்” என்றார்.

குத்துச்சண்டை மட்டுமல்லாது விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேரி கோம் தான் இன்ஸ்பிரேஷன். அவரை போல சாதிக்க வேண்டுமென்ற பெருங்கனவுடன் பலர் பயிக்கி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1990-களில் பி.டி.உஷா விளையாட்டுத் துறையில் சாதிக்கத் துடித்த பல பெண்களுக்கு உந்துசக்தியாக இருந்தார். புத்தாயிரத்தில் அந்த இடத்தைப் பெற்றவர் மேரி கோம். அதுவும் பெண்கள் அதிகமாக அனுமதிக்கப்பட்டிராத ஒரு விளையாட்டுப் பிரிவில், மலைக்கவைக்கும் சாதனைகளை நிகழ்த்தியிருப்பது மேரி கோமை இன்னும் பெரிய உயரத்தில் வைத்து கொண்டாடப்படப் பணிக்கிறது.

இந்நிலையில், குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதைப் பார்த்தேன். அது உண்மையல்ல. நேற்று(ஜனவரி 24) திப்ருகரில் உள்ள பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினேன். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இன்னமும் நான் இருக்கிறேன். ஆனால், வயது வரம்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் என்னால் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இருந்தபோதும், நான் எனது விளையாட்டைத் தொடர்கிறேன்.

எனது உடல் தகுதி விஷயத்தில் நான் இன்னமும் கவனமாக இருக்கிறேன். நேற்றைய நிகழ்ச்சியில் நான் பேசிய பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் ஓய்வு பெறுவதாக இருந்தால் முறைப்படி ஊடகங்களைச் சந்தித்து அதனை தெரிவிப்பேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *