பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்.. குறிச்சிக்கோங்க…
தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகை தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கலை பொறுத்தவரை பட்டி தொட்டி தொடங்கி பெருநகரங்கள் வரை உறவுகள் ஒன்று கூடி உற்சாகமாக பொங்கலை வரவேற்பர்.
அந்தவகையில் நடப்பாண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ம் தேதி தொடங்கி ஜனவரி 18 ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது அறுவடை பண்டிகை . ஆதலால் பொங்கலை கொண்டாடுவது தான் வாழ்வின் செழிப்பின் அடையாளம். ஆண்டு முழுவதும் நாட்டில் விவசாயம் செழிக்க உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை காலம் காலமாக கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் நாட்களில் வீட்டு வாயிலில் கோலமிட்டு அந்த ஆண்டு வயலில் அறுவடை செய்த புத்தரிசியுடன் வெல்லம் நெய் சேர்த்து பொங்கல் தயாரித்து சூரியபகவானுக்கு படையலிடுவர். கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிகத்தை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நாளை ஜனவரி 14ம் தேதி போகியுடன் பொங்கல் தொடங்குகிறது பழையன கழிந்து புதியன புகுவோம் என்ற அடிப்படையில்மனதில் தீய எண்ணங்கள், பொறாமை போன்ற எண்ணங்களை தவிர்த்து புதுவாழ்வில் புகுவோம். ஜனவரி 15, தை பொங்கல் திருநாள் , ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் ஜனவரி 17 ம் தேதியும், கன்யா பொங்கல் ஜனவரி 18 அன்றும் கொண்டாடப்பட உள்ளது. தைத்திருநாளில் இருந்து தமிழ் புத்தாண்டு தொடங்கும் என்பதும் தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது காலம் காலமாக தமிழர்களிடையே கூறப்பட்டு வரும் பழமொழி.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
ஜனவரி 15ம் தேதி திங்கட் கிழமை தை 1ம் தேதி
காலை 6.30 முதல் 7.30 வரை
காலை 9.30 முதல் 10.30 மணி வரை
பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை
அதே நேரம் 7.30 மணி முதல் 9.30 மணி வரை ராகுகாலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்ப்பது உத்தமம்.