தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் இவர்தான்: ரசிகரின் பாராட்டுக்கு பதிலளித்த மோகன்ராஜா!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

தனி ஒருவன் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்தில் தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தனி ஒருவன் 2 படப்பிடிப்பு 2024இல் தொடங்குமென சமீபத்தில் அறிவிப்பு விடியோ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தினை குறித்து ரசிகர் ஒருவர், ‘மருத்துவமனையில் மித்ரனை (ஜெயம் ரவி) அரவிந்த்சாமியால் எளிதாக கொன்றிருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை. ஏனெனில் மித்ரன் அவனது புத்திசாலி தனத்துடன் மோதியதால் அவனுடன் விளையாட முடிவெடுக்கிறான. மித்ரனிடம் எஸ்.டி.கார்டு கொடுக்காமல் அவனால் இறந்திருக்க முடியும். ஏனெனில் மித்ரன் போட்டியில் வென்றதாக வில்லன் நினைத்ததால் அந்தப் பரிசைக் கொடுத்தான். தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன்; சித்தார்த் அபிமன்யூ.” எனப் பதிவிட்டிருந்தார்.

இதனை பகிர்ந்து இயக்குநர், “வில்லனுக்கு மட்டுமல்ல இதை எழுதிய எழுத்தாளர்களுக்கும் நாம் மரியாதை தர வேண்டும். அதுதான் சட்டப்படி சரியானது” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *