300 கி.மீ வேகத்தில் ரயில் போகப்போற பாலம் இது தான்! வைரலாகும் செம புகைப்படம்!
இந்தியாவில் அதிவேகமாக பயணிக்கும் புல்லட் ரயில் பயணிப்பதற்கான பாலம் ஒன்று கட்டமைக்கப்பட்டு தயாராகியுள்ளதை தற்போது ரயில்வே நிர்வாகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் வாழ்நாளில் ஒரு முறையாவது ரயிலில் பயணம் செய்திருப்பார்கள். இப்படியாக ரயில் என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக இன்றியமையாத போக்குவரத்து வாகனமாக இருக்கிறது. இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்திய ரயில்வேயும் ஒவ்வொரு நாளும் தன்னை புதுப்பித்துக் கொண்டு மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் இந்த அப்டேட்கள் மற்றும் மேம்படுத்தல்களை எல்லாம் அவ்வப்போது எக்ஸ் தள பக்கம் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கும். இப்படியாக பல்வேறு போஸ்ட்கள் தினம் தோறும் ரயில்வே நிர்வாகத்தால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இப்படியாக சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் புகை ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்தது அதன்படி குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு ஆற்றை கடப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு பாலத்தை புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்து இருந்தனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரயில்வே நிர்வாகம் இதை ஒரு முக்கிய குறிப்பு ஒன்றை பதிவிட்டு இருந்தது. அதன்படி எதிர்கால ரயில் பாதைக்கான பாலம் இது என பதிவிட்டுதிருந்தனர்.
அதாவது மும்பை அகமதாபாத் இடையே தற்போது புல்லட் ரயில்கள் செயல்படுத்துவதற்காக பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாதை வழியாக மும்பை ஆமதாபாத் இடையே இந்தியாவிலேயே மிக வேகமாக பயணிக்கும் புல்லட் ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வரப்போகிறது. இந்நிலையில் இந்த கட்டுமானத்திற்காக தான் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
இந்த மும்பை ஆமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த ரயில் பாதை என்பது ஆறு ஆறுகளை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆறுகளை கடப்பதற்காக புதிய பாலங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது ரயில்வே நிர்வாகம் பகிர்ந்துள்ள புகைப்படம் இதில் ஒரு ஆற்றை கடக்க கட்டமைக்கப்பட்ட பாலம் தான்.
அதாவது குஜராத் மாநிலம் வளசரது மாவட்டத்தில் உள்ள அவுரங்கா என்ற ஆற்றைக் கடப்பதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் பில்மோரா மற்றும் வாப்பி ஆகிய புல்லட் ரயில் நிலையங்களுக்கு இடையே வரும் பாலமாக கட்டமைக்கப்படுகிறது. இந்த பாலம் 8 முழு நீள கிரிட்டர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிரீடர்களும் சுமார் 40மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. 20-26 மீட்டர் உயரம் கொண்ட தூண்கள் கொண்டு இந்த கிரீடர்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மும்பை-ஆமதாபாத் இடையே நடக்கும் இந்த புல்லட் ரயில் திட்டம் மொத்தம் 20 விதமான பாலங்களைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. அதில் 20 பாகங்கள் குஜராத் மாநிலத்திலும் நான்கு பாலங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இருக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது. இந்த பாலங்கள் எல்லாம் புல்லட் ரயில் தாங்கும் அளவுக்கு பலம் கொண்ட பாலங்களாக அமைக்கப்படுகின்றன.
இந்த மும்பை ஆமதாபாத் இடையே நடக்கும் புல்லட் ரயில் பாதை என்பது சுமார் 1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாயை வழங்குகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில அரசுகள் தலா ரூபாய் 5000 கொடியை வழங்குகின்றன. மீதமுள்ள பணத்தை ஜப்பான் அரசு நிதி உதவி மூலம் வழங்கிய இந்த புல்லட் ரயில் திட்டத்தை கட்டமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.