காம்பேக்ட் எஸ்யூவி கிங் இதுதான்! கம்மி விலையில் 29 கிமீ மைலேஜ் கொடுக்கும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர்!

காம்பேக்ட் எஸ்யூவி கார் சந்தையில் முத்திரை பதிக்கும் திட்டத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனத்துன் இணைந்து இந்தக் காரை களமிறக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரை அடிப்படையாக வைத்துதான் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) கார் உருவாகியுள்ளது. ஆனால், மாருதி சுசுகியின் காருக்கும் இதற்கு முக்கியமான வித்தியாசங்களும் உண்டு.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் டிசைன், மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் காரின் தோற்றத்தில் பல மாற்றங்களைச் செய்தே தயாரிக்கப்பட்டுள்ளது. டொயோட்டாவின் இந்தப் புதிய காரில், புதிய கலர் ஆப்ஷன்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் காரில் சிஎன்ஜி இன்ஜினும் வழங்கப்படுகிறது. இதனால், டொயோட்டாவின் புதிய காரிலும் சிஎன்ஜி இன்ஜின் இருக்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் உள்ளேயும் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றுடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கார் 28 முதல் 29 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுப்பதாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் இந்தக் கார் விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் ஆரம்ப விலை ரூ.8 லட்சமாக இருக்கலாம். அதே நேரத்தில் ப்ரீமியம் மாடலின் அதிகபட்ச விலை ரூ.14 லட்சம் வரை இருக்கலாம் எனவும் இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *