இந்தியால இப்படி ஒரு ஷோ நடப்பது இதுவே முதல்முறை.. நாளை தொடங்கும் கண்காட்சியில் மோடியும் கலந்துகொள்ள போகிறாரா!

இந்தியாவில் விரைவில் ‘பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ’ (Bharat Mobility Global Expo 2024) எனும் பெயரில் ஆட்டோமொபைல் துறைக்கான கண்காட்சி நடைபெற இருக்கின்றது. மிகப் பெரிய அளவில் இந்த கண்காட்சியை நிகழ்த்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன.
தலைநகர் டெல்லியிலேயே இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. பாரத் மண்டபத்திலேயே நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 3ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தகுந்தது. 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 800க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.
ஆகையால், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ எனும் இந்த ஒற்றை கூரையின்கீழ் பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டோமொபைல்ஸ் துறைக்கான எதிர்கால தொழில்நுட்பங்கள் அதன் தரிசனைத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் தலைநகர் டெல்லியில் இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொள்ள இருக்கின்றார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பின்னர் அதில் அவர் உரையாற்றவும் இருக்கின்றார். இந்த மாதிரியான ஓர் நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஆமாங்க, இந்தியாவில் நடைபெற இருக்கும் முதல் உலகளாவிய மொபிலிட்டி ஷோ இதுவாகும்.
இதனால்தான் அதனை சிறப்பிக்க பிரதமர் மோடி கலந்துக் கொள்ள இருக்கின்றார். இது ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல நாளைய மொபிலிட்டிகளுக்கான ஒரு திரைச்சீலையாகவும் அது இருக்கும். இந்தியா, வாகன உற்பத்தியாளர்களுக்கான மிகப் பெரிய சந்தைகளில் ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. மேலும், உலக அளவில் இந்தியா மிகப் பெரிய ஏற்றுமதி மையமாகவும் வளர்ந்து வருகின்றது.
இவற்றின் வளர்ச்சிக்கு நாளைய தினம் தொடங்க இருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ பெரும் உதவியாக இருக்கும் என கணிக்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களின் பங்கு 14 சதவீதமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த சதவிகிதத்தை 25ஆக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை இந்தியா எட்ட பாரத் மொபிலிட்டி ஷோ முக்கிய பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபிலிட்டி ஷோவில் வாகனத்துறைக்கான சாஃப்ட்வேர், அடுத்த தலைமுறை எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்டஸ்ட்ரியலுக்கான ஆட்டோமேஷன் போன்றவையே காட்சிப்படுத்த இருக்கின்றன. இதன் வாயிலாக வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன உற்பத்தி திறனை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இங்கு வாகன உற்பத்திக்கான தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, வாகனங்களுக்கான டயர்கள், புதிய வகை எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வாகன உலகம் சார்ந்த பிற தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. ஆகையால், வாகன ஆர்வலர்களுக்கு இந்த ஷோ மிகப் பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிக முக்கியமாக புதிய வகை ட்ரோன்கள், பேட்டரிகள், சார்ஜிங் மையங்கள், புதிய ஹைபிரிட் தொழில்நுட்பங்கள், ஹைட்ரஜன், சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி வகை வகனங்களும் இந்த ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவைச் சார்ந்த சில முன்னணி நிறுவனங்களும் இதில் கலந்துக் கொள்ள இருக்கின்றன.
மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், கியா இந்தியா, மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார் மற்றும் வாகனங்களுக்கான பாகங்களை தயாரித்து வரும் ஆக்மி உத்யோக் மற்றும் சுப்ரோஸ் போன்ற நிறுவனங்களே கலந்துக் கொள்ள இருக்கின்றன. இதுதவிர, பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களான அமராஜா மற்றும் எச்இஜி போன்றோரும் பாரத் மொபிலிட்டி ஷோவில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இவர்களுடன், டயர் உற்பத்தியாளர்கள், ஸ்டீல் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டு தங்களின் புதிய தொழில்நுட்பங்களை நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றனர்.