உலகெங்கும் அதிகளவு மக்களால் விரும்பி சாப்பிடும் மீன் இது..!

கடலில் வாழ்கின்ற மீன்கள் பெரும்பாலும் மனிதர்கள் உண்ணுவதற்கு ஏற்ற வகையில் உள்ளன. மீன்களில் பல்லாயிரம் வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே மனிதர்கள் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய வகையாக உள்ளன. அத்தகைய மீன்களில் ஒரு வகை தான் சால்மன் மீன் ஆகும்.இந்த மீன்களுக்கு மற்ற மீன்களிடம் இல்லாத ஒரு தனி சிறப்பு உண்டு. அது என்னவென்றால் இரை தேடுவதற்கு கடலில் வாழ்கின்ற இந்த சால்மன் மீன்கள் இனப்பெருக்க காலங்களில் மட்டும் கடலில் கலக்கின்ற நதிகளுக்குள்ளாக பயணித்து சென்று, அந்த நதிப் படுகையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.

சால்மன் மீன்கள் பசிபிக் சால்மன் மீன்கள் மற்றும் அட்லாண்டிக் சால்மன் மீன்கள் இரண்டு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன.

அட்லாண்டிக் வகை சால்மன் மீன் வகைகள்

1.அட்லாண்டிக் சால்மன்

2.சினூக் சல்மன்

3.ஜம் சால்மன்

4.கோஹோ சால்மன்

பசிபிக் சால்மன் மீன் வகைகள்

1.மசு சால்மன்

2.பிங்க் சால்மன்

3.சாக் ஐ சால்மன்

இந்த வகை மீனம் இந்திய கடற்பகுதிகளில் அதிக அளவில் தென்படுவது கிடையாது. ஆகையால் இதற்க்கு குறிப்பான தமிழ் பெயர் எதுவும் தற்போது இல்லை. ஆனால் இதே போன்ற மீன்கள் இங்கு உண்டு. அதனை காலா மீன் (Salmon fish name in Tamil) அல்லது இந்திய சால்மன் மீன் என்று அழைப்பதுண்டு.

அதிகம் எலும்புகள் இல்லாத, அதேநேரத்தில் சதைப்பற்று மிகுந்த, உண்பதற்கும் மிகவும் ருசியான கடல் உணவு வகையாக சால்மன் மீன்கள் திகழ்வதால், உலகெங்கும் அதிகளவு மக்களால் சால்மன் மீன்கள் விரும்பி உண்ணப்படுகின்றன. இந்திய பெருங்கடற்பகுதியில் “இந்தியன் சல்மன்” எனப்படும் சால்மன் மீன் வகை காணப்படுகின்றது. இந்த இந்தியன் சால்மன் மீன் தமிழில் “கிழங்கான் மீன்” என அழைக்கப்படுகிறது. இந்த சால்மன் வகை மீனுக்கு அதிகளவு தேவை உள்ளதால் மிகப்பெரிய பண்ணைகள் அமைத்து இந்த வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நார்வே, சிலி போன்ற நாடுகள் சால்மன் மீன்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன.

இதய ஆரோக்கியம் பெற சால்மன் மீன்

சால்மன் மீன் இறைச்சியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. வாரத்துக்கு இரண்டு முறை சால்மன் மீன்களை சாப்பிடுவதால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுப்பதாக அமெரிக்க மருத்துவ கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களின் ரத்த அழுத்தத்தை சால்மன் மீன் இறைச்சி சமன் செய்கிறது.மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலை ஏற்படாமல் காத்துக்கொள்ள அனைவரும் சால்மன் மீன் இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

மன அழுத்தம் நீங்க சால்மன் மீன்

சில நபர்களுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தம் காரணமாக அவர்களின் மூளை செயல்திறன் குறைந்து, மிகுந்த சோர்வுடன் எந்த விடயத்திலும் ஆர்வமில்லாமல் செயல்பட கூடிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய நபர்கள் சால்மன் மீன் இறைச்சியை சாப்பிடுவதன் மூலம், அதில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் அவர்களின் மூளை செயல்திறனை ஆற்றலை ஊக்குவித்து சுறுசுறுப்படைய செய்கிறது. மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.

கருவுற்ற பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உண்ண வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் கருவில் வளர்கின்ற குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு இந்த ஒமேகா-3 சத்துகள் மிகவும் தேவை எனவும், அது கிடைக்காத பட்சத்தில் கருவில் வளர்கின்ற குழந்தைக்கு மூளை நரம்புகள் தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறுகின்றனர்.மேலும் மற்ற மீன் வகைகளில் மிகச் சிறிய அளவில் உள்ள பாதரச சத்து, இந்த சால்மன் மீனில் அறவே கிடையாது என்பதால் கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்கள் இந்த சால்மன் மீனை தயக்கமின்றி சாப்பிடலாம்

அல்சைமர் நோய்

ஒரு சிலருக்கு 60 வயதை கடந்த பின்பு அல்சைமர் எனப்படும் மிகத் தீவிர மறதி நோய் ஏற்படுகின்றது. சால்மன் மீன் இறைச்சியில் ஒமேகா-3 அமிலச் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த அமிலச் சத்துகள் மூளையின் செயல்பாட்டுத் திறனை எப்பொழுதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்கவும். நரம்பு மண்டலங்களின் சீரான செயல்பாடு ஏற்படுவதற்கும் உதவியாக உள்ளன. இதனால் தீவிர ஞாபகமறதி தன்மை கொண்ட அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சால்மன் மீன் இறைச்சியில் அதிகளவு புரதச் சத்து உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அதீத கொழுப்பு சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை சாப்பிடுவதை குறைத்து, புரதம் நிறைந்த சால்மன் மீன் இறைச்சிகளை சாப்பிட்டு வருவதால் அவர்களில் உடலில் இருக்கின்ற தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையை குறைப்பதோடு, தசைகளை வலிமை பெறச் செய்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *