தோனிக்கு இம்முறை இது தான் சிக்கல் தான்.. சக்கர நாற்காலியில் தோனி இருந்தாலும் சிஎஸ்கே விடாது-உத்தப்பா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வாங்கி தர வேண்டும் என்ற ஒத்துழைக்கத்துடன் மகேந்திர சிங் தோனி தன்னுடைய 42வது வயதில் களமிறங்குகிறார்.
தோனிக்கு கடந்த சீசனிலே முட்டி பகுதியில் கடும் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அவதிப்பட்ட தோனி, தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி இருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, தோனி சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தாலும் அவரை சிஎஸ்கே அணி விளையாட அனுமதிக்கும். நாற்காலியில் இருந்து எழுந்து பேட்டிங் சென்று வா என்று சிஎஸ்கே அணி கூறும். ஆனால் தற்போது தோனிக்கு இருக்கும் பிரச்சனை பேட்டிங் கிடையாது .
அவருக்கு என்றுமே பேட்டிங் ஒரு சிக்கலாக இருக்காது. தற்போது பிரச்சினையே அவருடைய விக்கெட் கீப்பிங் தான் ஏனென்றால் அவருடைய முட்டி பகுதியில் தேய்மானம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் அவர் அதையும் மீறி விக்கெட் கீப்பிங் செய்வார். ஒருவேளை தம்மால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்ற ஒரு நிலை வந்தால் அவர் போட்டியிலிருந்து விலகிவிடும்.
வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று உத்தப்பா கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய ரெய்னா, சென்னையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு தோனி வந்து பயிற்சி செய்வார் என்றும் இரண்டு மூன்று மணி நேரம் வெப்பமான அந்த சூழலில் பயிற்சி செய்து விட்டு பிறகு ஜிம்முக்கு சென்று அங்கு உடற்பயிற்சி செய்வார் என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலம் தோனியின் உடல் தகுதி நன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள ரெய்னா பயிற்சி முகாமை இரண்டு, மூன்று வாரத்திற்கு முன்பு வைப்பதன் மூலம் ஒரு அணியாக வீரர்கள் ஒருவரை ஒருவர் பழகிக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்றும் ரெய்னா தெரிவித்துள்ளார்.