யூரிக் அமில பிரச்சனையை ஒழித்துக்கட்ட… உதவும் பவர்ஃபுல் ஜூஸ் இது தான்..!
இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, யூரிக் அமில பிரச்சனை என்பது பலருக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடலில் உண்டாகும் கழிவுகளில் ஒன்று யூரிக் அமிலம். இது அளவிற்கு அதிகமானால் மூட்டுகளில் சேர்ந்து, வலியை உண்டாக்குகிறது.
யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சுப்பொருள். சிறுநீரகம் இதனை வடிகட்டி வெளியேற்றும். எனினும் அளவிற்கு அதிகமாக ஆகும் போது, சிறுநீரகம் இதனை முழுமையாக வடிகட்ட முடியாமல் போகும் சமயத்தில், இவை உடலில் உள்ள மூட்டுகளில் சேர்ந்து கொண்டு வலிகளை ஏற்படுத்துகின்றன. யூரிக் அமில அளவை உணவு பழக்கம் மூலமும், சிறந்த கை வைத்தியம் (Uric Acid Home Remedies) மூலம் எளிதாக கட்டுப்படுத்தலாம்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த செய்ய வேண்டியவை
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், மூட்டுகளில் வலி அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்த உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும் என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில் பாகற்காய், யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும்.
பாகற்காயில் உள்ள சத்துக்கள்
பாகற்காய் என்று வரும்போது நம் மனதில் தோன்றும் முதல் விஷயம், அதன் கசப்பு தன்மை. நீரிழிவை சிறப்பாக கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பாகற்காய், யூரிக் அமிலத்தை சிறப்பாக கட்டுப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களுடன் ஒரு பவர் ஹவுஸ் ஆக விளங்கும் காய்கறி பாகற்காய். இது மட்டும் அல்ல பீட்டா கரோட்டின் மற்றும் கால்சியம் சத்தும் இதில் நிறைந்துள்ளது. இத்தகைய அற்புதமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பாகற்காய் சாற்றினை, எலிகளுக்கு கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், யூரிக் அமில அளவை சிறப்பான வகையில் கட்டுப்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
யூரிக் அமிலத்தை ஒழிக்கட்டும் பாகற்காய் ஜூஸ்
பாகற்காயை எந்த வடிவில் சாப்பிட்டாலும் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. பாகற்காயை உணவில் பொரியல், சாம்பார் போன்றவற்றில் பயன்படுத்தலாம். இருப்பினும் பாகற்காயின் அதிகபட்ச பலனை பெற, தினமும் காலையில் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் அருந்துவது சிறந்தது. இதன் மூலம் யூரிக் அமிலம் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும். மூட்டு வலிக்கு தீர்வு தீர்வு கிடைக்கும்.
பாகற்காயின் பிற ஆரோக்கிய நலன்கள்
பாகற்காய் நீரழிவு நோய்க்கு எமனாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.. அதுமட்டுமின்றி இது புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும், கெட்ட கொழுப்பை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் தொடர்பான நோய்களை தவிர்க்கவும்,, வயிறு சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உதவும்.