29 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! இப்பவே ஷோரூம்ல பாயை விரிச்சு படுத்தற வேண்டியதுதான்!
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) மூலமாக இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்க டொயோட்டா நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இது மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கூட்டணி மூலமாக டொயோட்டா களமிறக்கவுள்ள தயாரிப்பு ஆகும்.
ஆம், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் அடிப்படையில்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார் வரவுள்ளது. ஆனால் இது வெறுமனே ரீ-பேட்ஜ் வெர்ஷனாக மட்டும் வரப்போவதில்லை. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் டைசர் காரில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் டிசைனுடன் ஒப்பிடும்போது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரின் டிசைனில், பல்வேறு மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். அதேபோல் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில், பல்வேறு புதிய கலர் ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரில் தற்போது சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
எனவே டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரிலும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வழங்கப்பட்டால், அது ஒரு கிலோவிற்கு சுமார் 28 அல்லது 29 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்க கூடியதாக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதன் முக்கியமான வசதிகளில் ஒன்றாக இருக்கலாம்.
இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் காரில் கொடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அனேகமாக இந்த காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.