இதுதான் அணிலின் அன்பு… நெகிழ்ச்சி வீடியோவை பகிர்ந்த உரிமையாளர்!
மனிதர்கள், விலங்குகளின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. நாய், பூனை, கிளி, மாடு, ஆடு என எந்த விலங்குகளாக இருந்தாலும் தங்களது உரிமையாளர்கள் மீது பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் காட்சிகளை நாம் கண்டிருப்போம். அதேபோல உரிமையாளர்கள் தங்களது செல்ல பிராணிகளுக்கு மிகவும் சவுகரியமான வசதிகள் செய்து கொடுப்பதையும் பார்த்திருப்போம். இதேபோல எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது அடிக்கடி வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் பிரபல சமூக வளைத்தளமான X தளத்தில் பரவிவரும் சமீபத்திய வைரல் வீடியோ, மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே இருக்கும் ஆழமான பிணைப்பை அழகாக காட்டுகிறது. அனைவரது மனதையும் கவர்ந்த அந்த வீடியோவில், ஒரு தாய் அணில் தனது நண்பரான ஒரு பெண்ணை தனக்கு பிறந்த குழந்தைகளிடம் அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
அந்த பெண் மீதான அணில் நம்பிக்கை மற்றும் பாசத்தின் வெளிப்பாடாக இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவில், தாய் அணில் தன் தோழியின் கையை பிடித்தபடி வீடியோ தொடங்குகிறது. அந்த பெண்ணின் விரல்களை மெதுவாகப் பற்றிக்கொள்வதற்கு முன், அந்த சிறிய அணில் அழகாக தகவல் கூற வருவது போல பேசுகிறது, பின்னர் ஒரு பயணத்தைத் தொடங்குகிறது, அது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. மிகவும் அழகான தனது முக பாவனைகளை வெளிப்படுத்துவது அனைவரையும் கவர்கிறது.
இதோ அணில் அழைத்து செல்லும் அழகிய வீடியோ…
Hey hooman! Take a look at ma babies. pic.twitter.com/zx90JgyRuU
— B&S (@_B___S) December 16, 2023
இதனை தொடர்ந்து, அணில் அந்த பெண்ணை வழிகாட்டி அழைத்து செல்கிறது. உள்ளே சென்றதும் ஒரு வசதியான தங்குமிடத்திற்குள், தாய் அணில் பெருமையுடன் தனது பிறந்த குழந்தைகளை அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்கிறது. மிகவும் கியூட்டாக இருக்கும் இந்த வீடியோவில், அணில் அழகாக இருப்பதை காண முடியும். இந்த அழகான பரிமாற்றத்தில், அந்த பெண் தனது மற்றொரு கையில் செல்போனை வைத்திருப்பதாக விளக்குகிறார்.
அந்த பெண் தான் அணிலை வளர்த்து வருவதாக தெரிகிறது. அணிலை வளர்ப்பதில் பெண்ணின் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்படுகிறது, அணில் குடும்பத்திற்கு பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்கி, உணவு, மற்றும் பாதுகாப்பான கூடு கட்டியிருக்கிறார்கள். செல்லப்பிராணிகளை இரக்கத்துடன் நடத்தப்படும் போது மனிதர்கள் மீது நம்பிக்கையை அதிகரிக்கிறது என்ற கருத்தை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளார். இந்த வீடியோ நெட்டிசன்கள் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்தும் வருகின்றனர்.