இந்த இங்கிலாந்து அணிக்கிட்ட வச்சுக்காதீங்க.. என்ன நடந்ததுனு பார்த்தீங்களா.. நாசர் ஹுசைன் வார்னிங்!

ஐதராபாத் : பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை அவ்வளவு எளிதாக யாராலும் வீழ்த்திட முடியாது என்பதை நிரூபித்துவிட்டார்கள் என்று முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பேஸ் பால் அணுகுமுறையுடன் பல்வேறு வெற்றிகளை குவித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தானில் கூட இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இந்திய மண்ணில் பேஸ்பால் அணுகுமுறை வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வி இருந்தது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதல் டெஸ்டிலேயே வென்று சாதித்துள்ளது இங்கிலாந்து அணி.

போப்பின் அபார ஆட்டம், அறிமுக வீரர் டாம் ஹார்ட்லியின் அபார பவுலிங், வீரர்களின் மன உறுதி, இந்திய பிட்சை வேகமாக கணித்து செயல்பட்டது என்று ஒட்டுமொத்தமாக சேர்ந்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் செய்த தவறுகளை இரண்டாவது இன்னிங்ஸில் திருத்தி கொண்டு களமிறங்கியதும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் பேசுகையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியிடம் பிடித்ததே அவர்களின் பிடிவாதம் தான். அவர்கள் மீது சந்தேகம் வரும் போதெல்லாம், அவர்களின் பிடிவாத குணம், இரண்டு மடங்காக உயர்கிறது. இதுதான் இங்கிலாந்து அணிக்கு பயனளிக்கிறது. ஏனென்றால் வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறார்கள்.

கதை முடிந்தது என்று எழுதும் பல்வேறு தியர்களை இங்கிலாந்து அணி பார்த்து கடக்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் தற்போது ஆடி வரும் இங்கிலாந்து அணிக்கு தங்களுக்கு என்ன வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது. அவர்களின் ஆட்டத்தை இப்படிதான் தொடர போகிறார்கள், அப்படி விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் அரணாக இருக்க போகிறார்கள். என்னை பொறுத்தவரை, இந்த இங்கிலாந்து அணி அபாயகரமான அணியாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அபாரமாக செயல்பட்டது.

436 ரன்கள் மட்டுமல்லாமல், சில தேவையற்ற ஷாட்களால் விக்கெட்டை கொடுக்கவில்லை என்றால், கூடுதலாகவே ரன்களை சேர்த்திருக்க முடியும். அதனால் அவர்கள் நிச்சயம் கம்பேக் கொடுப்பார்கள். இந்திய அணியின் திறமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எப்போது இந்திய மைதானங்கள் கடினமானவை என்பதை வரலாறு மூலம் அறிந்து கொள்ளலாம். இது இந்திய அணிக்கு அடிக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணி. இந்திய மைதானங்களிலும் பேஸ் பால் மூலம் வெல்ல முடியும் என்று காட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *