30,000 மக்கள் உயிரிழந்த நிலையில் நெதன்யாகு கூறிய விடயம்

காசாவில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை இஸ்ரேல் அரசு தொடரும் என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகு
ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர்களிடம் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) காணொலி காட்சி வழியாக உரையாற்றினார்.

அப்போது அவர், காசா பகுதியில் ஹமாஸை தோற்கடிப்பதற்கான தனது முயற்சிகளை தனது அரசாங்கம் தொடரும் என்று தெரிவித்தார்.

செனட்டின் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மைத் தலைவரும், யூத அமெரிக்கருமான செனட்டர் Chuck Schumer, ”இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என ஜனநாயகக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும் கொள்கைகள் காரணமாக நெதன்யாகு இஸ்ரேலை ஆளத் தகுதியற்றவர்” என கடுமையாக சாடினார்.

Chuck Schumer சாடல்
மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் நீண்ட கால எதிர்காலம் குறித்து நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன். நீங்கள் பிரச்னையை பக்க சார்பற்றதாக ஆக்கும்போது, இஸ்ரேலுக்கு உதவுவதற்கான காரணத்தை நீங்கள் காயப்படுத்துகிறீர்கள் என்று Schumer செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும், குடியரசுக் கட்சி வட்டாரங்களில் நெதன்யாகு தனது ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *