அயலான் படத்தைப் பார்த்து ரஜினி சார் இதைதான் சொன்னார். சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்!

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது கேப்டன் மில்லர், அயலான், மிஷன் 1 மற்றும் மெரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில் அயலான் படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

படத்தில் இடம்பெற்ற வி எஃப் எக்ஸ் மற்றும் ஏலியன் சம்மந்தப்பட்ட காட்சிகள் குழந்தைகளை கவர்ந்தது. ஆனால் பெரியவர்களின் பொறுமையை இந்த படம் பல இடங்களில் சோதித்தது. இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி வரைக்கும் அயலான் திரைப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த படம் தெலுங்கில் ரிலீஸான நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த ஒரு நேர்காணலில் “அயலான் படத்தைப் பார்த்த ரஜினி சார், படம் பிடித்திருந்ததாகக் கூறினார். மேலும் தான் வித்தியாசமானக் கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடிப்பது பிடித்திருப்பதாகவும் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *