நீங்க அடிக்கடி சாப்பிடுற இந்த உணவுகள் ஆல்கஹாலை விட மோசமாக கல்லீரலைப் பாதிக்குமாம்… ஜாக்கிரதை…!
சில உணவுகள் உங்கள் உடலில் ஏன் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன, மற்றவை ஏன் ஆபத்தானவையாக இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
நமது உணவுதான் நம் உடலை ஆரோக்கியமாக்குகிறது, மேலும் நமது உணவே அதை அதிகம் பாதிக்கக்கூடியது.
மது அருந்துவது கல்லீரலைப் பாதிக்கும் என்பது நமக்கு சிறுவயது முதலே சொல்லித்தரும் ஒரு நடைமுறையாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில உணவுகள் ஆல்கஹாலை விட நம் கல்லீரலை மோசமாகப் பாதிக்கிறது.
ஆரோக்கியமான கல்லீரல் ஆரோக்கியமான உடலின் மையமாகும், எனவே அதை எவ்வாறு சிறந்த முறையில் கவனித்துக்கொள்வது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த பதிவில் ஆல்கஹாலை விட கல்லீரலை மோசமாக பாதிக்கும் உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
குளிர்பானங்கள்
குளிர்பானங்கள் திரவ வடிவில் அதிக அளவு சர்க்கரையைத் தவிர வேறொன்றுமில்லை, சர்க்கரையைத் தவிர, குளிர்பானங்களில் வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் போன்ற பயனுள்ள எதுவும் இல்லை. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது நமது கல்லீரலில் கொழுப்பை அதிகரிக்கிறது.
இது இறுதியில் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டு கொழுப்பு கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது. நமது மொத்த கலோரியில் 10% மட்டுமே சர்க்கரையின் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி கல்லீரலுக்கு மிகவும் மோசமானது, ஏனெனில் அதில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, அதை அடிக்கடி உட்கொள்ளும் போது அது கல்லீரலை ஆல்கஹாலை விட மோசமாக சேதப்படுத்தும்.
வறுத்த உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சியைப் போலவே, வறுத்த உணவிலும் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. அதிக நிறைவுற்ற கொழுப்பை உட்கொள்வது கல்லீரல் சரியாக செயல்படுவதை கடினமாக்குகிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும்.