இதனால் தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டாராம் நடிகை அமலா பால் – பயில்வான் ரங்கநாதன்..!!
இயக்குநர் ஏ.எல் விஜய் விவாகரத்து செய்த பிறகு சிங்கிளாக இருந்து வந்த அமலாபால், அவரது பிறந்தநாளில் காதலர் ஜெகத் தேசாயை அறிமுகப்படுத்தினார்.
அறிவித்த ஒரே வாரத்தில் இருவருக்கும் நட்சத்திர விடுதியில் மிக எளிமையாக திருமணம் முடிந்தது. அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் திருமணமான இரண்டு மாதங்களில் அமலாபால் கர்பமாக இருப்பதாக போட்டோஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்தார்.
நடிகை அமலா பால் நடத்தியுள்ள போட்டோஷூட்டில் வயிறு பெரிதாக இருப்பதை சுட்டிக்காட்டி யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ள சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன், திருமணத்துக்கு முன்னர் ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த அமலாபால், ஒருவேளை கல்யாணத்துக்கு முன்னாடியே அது நடந்து கர்ப்பம் ஆகியிருப்பாரோ என சந்தேகம் வருவதாக கூறி உள்ளார்.
திருமணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால்தான் அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.