முழங்கால் வரை முடி வளர இந்த ஒரு பூ போதும்: இப்படி பயன்படுத்துங்க
பெண்களின் தலைமுடி என்பது எப்பொழுதும் ஒரு தனி அழகுதான். ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான நீளமான கூந்தலுக்கு இந்த செம்பருத்தி பூ ஒன்னு போதும். செம்பருத்தி பூ கொண்டு ஹேர்மாஸ்க் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூ- 7
செம்பருத்தி இலை- 5
கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் செம்பருத்தி பூ, செம்பருத்தி இலைகள் மற்றும் கற்றாழை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
இதனை அவ்வப்போது பயன்படுத்தும்பொழுது உடனடியாக தயார் செய்து கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
இந்த பேஸ்டை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை தடவி கொள்ளவும்.
அடுத்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சனை இருக்காது.
செம்பருத்தியில் ஆன்டிஆக்ஸிடன்டகள், வைட்டமின்கள் உள்ளதால் தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடி கொட்டுதல் பிரச்சனையையும் நிறுத்துகிறது.