இந்த ஒரு பழம் போதும்… சுகமான மற்றும் வலியற்ற பிரசவத்திற்கு கேரண்டி!

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு அழகான மாற்றம் மற்றும் ஒரு முக்கியமான கட்டமாகும். இந்த காலகட்டத்தில், உடலின் மாறிவரும் தேவைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஏற்ப உணவு மிகவும் சத்தானதாகவும் மாறுபட்டதாகவும் இருக்க வேண்டும். எனவே, இந்த காலகட்டத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். சரியான உணவுகளை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம், குழந்தையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அந்தவகையில், கர்ப்ப காலத்தில், சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக பேரீச்சம்பழம் சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. அதன்படி, இக்கட்டுரையில் கர்ப்பிணிகள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியம்: பேரிச்சம்பழத்தில் பல முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை கர்ப்ப காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்களில் பொதுவாகக் காணப்படும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் கரையக்கூடிய நார்ச்சத்தும் இதில் உள்ளது. அதுபோல, இதில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும், இரத்த சோகையை தடுக்கவும், தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் பி9 அல்லது ஃபோலேட் குழந்தையின் நரம்பு மண்டலத்தின் சரியான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இதன் மூலம் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். மேலும், இரத்தம் உறைவதற்குத் தேவையான வைட்டமின் கே மற்றும் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் பேரிச்சம்பழத்தை செறிவூட்டுகின்றன.

அதிக ஆற்றலைக் கொடுக்கும்: கர்ப்ப காலத்தில் வளரும் குழந்தைக்கு உடலின் சக்தியின் பெரும்பகுதி செலவிடப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் சோர்வடைகிறார்கள். அவர்களுக்கு மற்றவர்களை விட சற்று அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த குறைபாட்டை பேரிச்சம்பழம் வெற்றிகரமாக பூர்த்தி செய்கின்றன. எப்படியெனில், இதிலுள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் தேவைக்கேற்ப ஆற்றலை அளிக்கின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளைப் போல அவை இரத்த குளுக்கோஸ் அளவை விரைவாக உயர்த்தாது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் இதை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

செரிமானத்தை எளிதாக்கும்: கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல். குறிப்பாக மூன்றாவது மூன்று மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும். அச்சமயத்தில், பேரீச்சம்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, செரிமானம் ஆன உணவு வயிறு மற்றும் குடல் வழியாக எளிதில் செல்லவும், அவ்வப்போது அதிக சிரமமின்றி மலம் வெளியேறவும் உதவுகிறது. மேலும், பேரீச்சம்பழத்தில் உள்ள டானின்கள் குடலில் ஏற்படும் வாய்வு வலியை நீக்குகிறது.

ஆரோக்கியமான எடைக்கு: கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணிப் பெண் எடை அதிகரிக்கும். வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது என்பதற்கான அறிகுறி இது. பேரீச்சம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இந்த வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் கர்ப்பகால எடை அதிகரிப்பை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருக்க இது பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது இனிப்பானது, இதனால் கர்ப்பிணிப் பெண்ணின் உணவுப் பசியை நிறைவேற்றுவதன் மூலம் தேவையற்ற ஆரோக்கியமற்ற மற்றும் கண்ணைக் கவரும் உணவுகளை உட்கொள்ளும் விருப்பத்திலிருந்து விடுவிக்கிறது. இது மறைமுகமாக அதிக எடை அதிகரிப்பதை தடுக்கிறது.

ஆரோக்கியமான பிரசவத்திற்கு: உங்களுக்கு தெரியுமா.. கர்ப்ப காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ஆரோக்கியமான பிரசவத்திற்கு உதவும். ஆய்வுகளின்படி, கர்ப்பத்தின் கடைசி நாட்களில் பேரீச்சம்பழத்தை தவறாமல் உட்கொண்டால், பிரசவத்தின்போது கருப்பை வாய் எளிதில் விரிவடையும்.

முக்கிய குறிப்புகள்:

பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கி, கர்ப்பிணிகள் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி பேரிச்சம்பழம் போதும்.

அதுபோல், உங்களுக்கு பிடித்த ஸ்மூரிதியில் சர்க்கரைக்கு பதிலாக ஓரிரு பேரீச்சம்பழங்களை அரைத்து, குடிக்கவும்.

பாயாச போன்ற உங்களுக்குப் பிடித்த இனிப்புகளில் சர்க்கரையைச் சேர்ப்பதற்குப் பதிலாக, பேரீச்சம்பழத்தை சிறிய துண்டுகளாக அரைத்து சேர்க்கலாம்.

பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக இருக்கலாம், ஆனால் அளவுக்கு அதிக அளவு சாப்பிடுவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இதில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உட்கொள்ளும் அளவு அதிகரித்தால், எடையும் அதிகரிக்கும். எனவே, மிதமாக உட்கொள்ளுங்கள், ஆனால் தவறாமல். உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் அல்லது வேறு ஏதேனும் மருத்துவ நிலை இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற மறக்காதீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *