நெய் மணக்கும் இந்த பாயாசத்தை செய்து பாருங்க: அம்புட்டு ருசியா இருக்கும்
இந்த பாலாக்கொட்டை பாயாசத்தை ஒரு முறை செய்தால் போதும், மற்றவர்கள் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
8 பலாக்கொட்டை
2 ஸ்பூன் நெய்
8 முந்திரி நறுக்கியது
2 ஸ்பூன் திராச்சை
2 கப் அளவு காய்ச்சிய பால்
1 கப் வெல்லம்
தண்ணீர்
2 ஏலக்காய் இடித்தது
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி நறுக்கியது, திராட்சைகளை வதக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். பாலா கொட்டைகளை நீளமாக நறுக்க வேண்டும். இதை நெய்யில் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து காய்ச்சிய பாலை சேர்த்து கொதிக்க வைக்கவும். தற்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவ்வப்போது கிளரவும். இனியொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி, பாலில் சேர்க்கவும். தொடர்ந்து மிதமான தீயில் கிளரவேண்டும். கடைசியாக முந்திரி, திராட்சைகளை சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் இடித்ததை சேர்க்கவும்.