இந்த ஸ்வீட்டையா இவ்வளவு நாள் விரும்பி சாப்பிட்டோம்… அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் இனிப்பு பண்டங்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. அதுவும் பண்டிகை, விசேஷ காலங்களில் அனைத்து வீடுகளிலுமே பலகாரங்களின் நறுமணம் வாயில் எச்சில் ஊற வைக்கும். அதுவும் குறிப்பாக ரிவாடி (Rewadi) போன்ற இனிப்புகளை பற்றி சொல்லியே ஆக வேண்டும். சமீபத்தில் வழக்கத்திற்கு மாறான முறையில் ரிவாடி இனிப்புகளை தயாரிக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இனி தங்கள் வாழ்நாளில் ரிவாடி இனிப்பை கையால் கூட தொட மாட்டேன் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். @nutritionistmisha என்ற பெயருடைய இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. ரிவாடி இனிப்பு எப்படி செய்ய வேண்டும் என ஒவ்வொரு நிலையாக இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. முதலில் இதற்காக சர்க்கரை பாகை தயார் செய்கிறார் ஒருவர்.

அவர் இதை செய்யும் போது கையுறை எதையும் பயன்படுத்துவதில்லை. அதேப்போல் தலைமுடியை மூடவும் இல்லை. பின்னர் சர்க்கரை பாகை கெட்டியாக வரும் வரை கிண்டி, அதை ஓரிடத்தில் தொங்கவிடுகிறார். அதன்பிறகு அதை நீள் வரிசையில் உருட்டி, சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டுகிறார். அனைவரையும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் இனிதான் வரப்போகிறது. துண்டுகளாக வெட்டப்பட்டதை வட்ட வடிவில் மாற்றுகிறார். பின்னர் அதை தரையில் போட்டு நன்றாக கால்களால் மிதிக்கிறார். இப்படிதான் அனைவரும் ஆவலோடு ருசிக்கும் குளிர்கால இனிப்பான ரிவாடி தயாரிக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *