இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது.. மும்பையின் ஆதிக்கம் தொடரும்.. கேப்டன் ரஹானே கருத்து

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி சாம்பியன் பட்டத்தை 42 வது முறையாக மும்பை அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதில் கேப்டனாக களம் இறங்கிய ரகானே, தன்னுடைய வாழ்நாளில் இது சிறந்த வெற்றி என்று தெரிவித்திருக்கிறார்.

ரஹானே இந்திய அணிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். சாம்பியன் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மும்பை அணியின் கேப்டன் ரகானே,

ரஞ்சிப் போட்டிகளுக்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுத்திருப்பதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர் வீரர்களை அடிக்கடி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும். இது பிசிசிஐ எடுத்திருக்கும் சிறந்த முடிவு என்று நான் நினைக்கின்றேன். இந்த வெற்றி எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் நல்ல முறையில் விளையாடினோம்.

ஆனால் இப்போதுதான் எங்களால் சாம்பியன் படத்தை வெல்ல முடிந்தது. மும்பை ரஞ்சி அணியில் இருந்து இந்திய அணிக்கு சென்று எங்களுடைய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். இது மும்பை கிரிக்கெட்டிற்கு ஒரு நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். மற்ற அணிகள் குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் இங்கிருந்து இனி வரும் காலத்தில் மும்பை அணி மிக சிறப்பாக செயல்படும்.எங்களுடைய வீரர்கள் இன்னும் வரும் காலங்களில் முதிர்ச்சி அடைவார்கள். மும்பை அணி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இனி நாங்கள் யோசிப்போம்.

இந்த வெற்றியை இனிவரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று எங்களுடைய குறிக்கோளை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ரகானே கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய கடைசி ரஞ்சிப் போட்டியில் விளையாடிய தவால் குல்கர்னி ரசிகர்களிடம் பிரியாவிடை பெற்ற அவர் இந்திய அணிக்காக 12 ஒரு நாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிருக்கிறார்.

95 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள தவால் குல்க்கர்னி 281 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். தன்னுடைய ஓய்வு குறித்து பேசியவர், நான் இந்தியல் அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் நடந்தது நடந்து முடிந்து விட்டது. அதைப்பற்றி நான் யோசிக்கவில்லை. இனி எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றி தான் நான் யோசிக்கிறேன் என தவால் குல்கர்னி கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *