Thoothukudi Floods: ’மத்திய அரசின் உதவி தமிழ்நாட்டுக்கு தேவை!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

தென் மாவட்ட வெள்ள பாதிப்பை சரி செய்ய மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசு கணிசமான நிதியை எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், மழையால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள தென் மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த நூற்றாண்டில் 50 புயல்களை எதிர்கொண்ட தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையைக் கொண்ட தமிழகம் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. மிக்ஜாங் புயலுக்கு பிறகு சமீபத்தில் பெய்த மழையால் தென் மாவட்டங்கள் கடும் துக்கத்தை சந்திக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மூத்த நிர்வாகிகள் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம், தற்போதைய நிலை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, தமிழக அரசு சார்பில் விளக்கப்பட்டது. நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதியின் முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு விரிவான 72 பக்க குறிப்பாணையை நிர்மலா சீதாராமனிடம் அவர்கள் அளித்தனர்.

சேதமானது தற்போதைய வளங்களை விட அதிகமாக உள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் கீழ் வரையறுக்கப்பட்ட நிதி மட்டுமே இருப்பதால், இந்த முன்னோடியில்லாத சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசிடம் இருந்து கணிசமான உதவியை தமிழ்நாடு ஆர்வத்துடன் நாடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *