ரஷ்ய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்: புடின் கண்டனம்
ரஷ்ய-மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய துக்க நாள்
இதன்போது அவர் மேலும் கூறியதாவது, இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதலானது ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டு மிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
எல்லையை கடக்க முயன்ற அவர்களை ரஷ்ய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.
உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த நோயாளர்காவு வண்டி பணியாளர்களுக்கு, தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று(24) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன் என கூறியுள்ளார்.