பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழ்பவர்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவருவதற்கான விதிமுறைகள்..
பிரான்சில் குடியிருப்பு உரிமை பெற்று வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் உறவினர்களை பிரான்சுக்கு அழைத்துவர அனுமதி உள்ளதா? அதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்…
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், மூன்றாவது நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குமான விதிகள், கிட்டத்தட்ட எல்லா வகையிலும் வித்தியாசமானவை என்பதை மனதில் கொள்வது நல்லது. குறிப்பாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு, அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, பிரித்தானியர்களுக்கான விதிகள் மாறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
ஆனால், பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலான மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அப்படியல்ல. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரான்ஸ் குடிமக்களை திருமணம் செய்திருந்தால், அவர்கள் கணவன் அல்லது மனைவிக்கான விசா பெற்று, தன் துணையுடன் பிரான்சில் வாழலாம்.
வெளிநாட்டவர்கள் பிரான்சில் நீண்ட காலம் தங்குவதற்காக பல வகை விசாக்கள் உள்ளன என்றாலும், இந்த செய்தி, பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரை பிரான்சில் வாழ அழைத்துவருவதைக் குறித்தது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
Regroupement Familial
பிரான்சில் குடியிருப்பு அனுமதி பெற்று வாழும் ஒருவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர், விசா பெற்று, அவருடன் பிரான்சில் குடியமர விரும்பும் நிலையில், அதற்கான நடைமுறை, Regroupement familial என அழைக்கப்படுகிறது. இதைப்போலவே, இன்னொரு நடைமுறை உள்ளது, அதன் பெயர் réunification familiale என்பதாகும். அது, நாடற்றோர் அல்லது அகதி நிலை பெற்றோருக்கானதாகும். ஆகவே, இந்த இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.