எப்போதும் மன இறுக்கம், டென்ஷன் என்றிருப்பவகள் இந்த நீரை தினமும் பருகி வர…

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம்.லெமன் ஜூஸை சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்தால் அதுவே லெமன் வாட்டர் ஆகும். பொதுவாக லெமன் வாட்டர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த மேஜிக் டிரிகை காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடிக்கும் போது எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது

எடை இழப்புக்கு லெமன் வாட்டர் ஒரு உண்மையான கூட்டாளியாகும். ஏனென்றால் இது பசியை அடக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற பிற இனிப்பு பானங்களை குடிப்பதை கட்டுப்படுத்தும். லெமன் வாட்டர் உடலில் ஹைட்ரேஷனை அதிகரிக்கவும் உதவுகிறது. முக்கிய பண்டிகைகள் மற்றும் பெரிய நிகழ்வுகளில் பங்கேற்று பல வேளை விருந்து உண்ட பிறகு லெமன் வாட்டர் எடுத்து கொள்வது நல்லது. ஏனெனில் இது நம் உடலை சரியான பாதையில் வைப்பதற்கு சிறந்த வழி என்கிறார்கள் நிபுணர்கள்.

காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதற்கு பதிலாக, இந்த எலுமிச்சை நீரைப் பருகி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். உடலின் தேவையற்ற கொழுப்புச்சதைகளைக் கரைக்கும் வல்லமை எலுமிச்சை நீருக்கு உண்டு.

1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சனையை சீராக்குகிறது.

2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது.

4. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

5. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது.

6. வாய் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது.

7. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

8. மன இறுக்கம். இன்றைக்கு டிப்ரஷன், டென்ஷன் என்ற வார்த்தைகளை அதிகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் மன இறுக்கம், மனத் தளர்ச்சி, டென்ஷன், எரிச்சல், அயர்ச்சி என்றிருப்பவகள், இந்த எலுமிச்சை நீரை தினமும் பருகி வர… நம்முடைய மனநிலையை மேம்படுத்தி, சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் நம்மை உணர வைக்கும்.

இந்த எலுமிச்சை நீரை மீண்டும் சூடேற்றிப் பருகலாமா என்ற சந்தேகம் எழும். நீங்கள் சூடுபடுத்த வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் மிகவும் குளிர்ச்சியான நிலையில் பருகாதீர்கள். ஒருவேளை வெதுவெதுப்பான நிலையில் வேண்டுமானால், ஒரு டம்ளரில் எலுமிச்சை நீரை ஊற்றி, வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பிறகு பருகுங்கள்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *