இந்த ஷேரில் 1 லட்சம் முதலீடு செய்தவர்கள் இப்போ 3.81 கோடிக்கு முதலாளி! செமல்ல!!
இந்திய பங்குச்சந்தையில் பல்வேறு சிறு நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபத்தை அள்ளித்தந்துள்ளன. அப்படி 1 லட்சம் ரூபாய் முதலீட்டை 3.81 கோடி ரூபாயாக லாபம் பெற்று தந்த நிறுவனம் குறித்து பார்க்கலாம்.
ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புகள் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளது ஹஸூர் மல்டி பிராஜக்ட்ஸ் லிமிடெட் (Hazoor Multi Projects) நிறுவனம். நாட்டின் முக்கிய சாலை திட்டங்களை இந்த நிறுவனம் கையகப்படுத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மல்டி பேக்கர் பங்கு 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1 ரூபாய் என்று இருந்தது, தற்போது இந்த பங்கின் விலை 380 ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 38,000 சதவிகிதம் வளர்ச்சி ஆகும். எனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அது 3.81 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும்.
கடந்த ஒரு வாரத்தில் இந்த மல்டிபேக்கர் ரியால்டி பங்கு அடுத்தடுத்த இரண்டு வர்த்தக நாட்களுக்கு அப்பர் சர்க்கியூட் நிலையை எட்டியது. கடந்த 6 மாதத்தில் மட்டும் இந்த பங்கின் மதிப்பு 190 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 6 மாதங்களுக்கு முன் ஒரு பங்கின் விலை 130 ரூபாயில் இருந்து 381 ரூபாய் என உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் பங்கின் மதிப்பு 280 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒரு பங்கின் விலை 99.60 ரூபாய் என இருந்த நிலையில் அது 381 ரூபாய் என உயர்ந்துள்ளது.
பங்குகளின் வரலாற்றை காணும் போது , 6 மாதங்களுக்கு முன்பு இந்த பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது 2.90 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கும். அதே போல ஓராண்டுக்கு முன்பு இந்த பங்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 3.80 லட்சமாக அதிகரித்திருக்கும்.
இந்த பங்கு மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் சந்தை மூலதன மதிப்பு 387 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் பங்குகளில் 64.68 சதவிகித பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களிடமே உள்ளன, புரமோட்டர்கள் வசம் 25.93 சதவிகித பங்குகள் உள்ளன. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 9.39 சதவிகித பங்குகளை கொண்டுள்ளனர்.