இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் செல்வ வளமும் கிட்டும்..!

குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள். பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண் கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள்.
திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.
இந்த மந்திரத்தை தினமும் காலையில் 108 முறை சொல்லலாம். எனினும் மந்திரம் சித்தியாக மாதத்தில் வருகின்ற வளர்பிறை நவமி திதி தினம் மற்றும் தேய்பிறை சப்தமி தினத்திலும் இந்த மந்திரத்தை 108 முறை அல்லது ஆயிரத்தெட்டு முறை உரு ஜெபிப்பதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும். செல்வ வளம் மற்றும் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
மனிதர்களின் உடல் இயற்கையின் அற்புதமான ஒரு படைப்பு என்பது சித்தர்களின் கருத்து. அப்படியான இந்த மனித உடலில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற ஏழு ஆதார சக்திகளை இயக்கி, குண்டலினி சக்தியை மேல் எழும்ப செய்து. இறை தரிசனம் பெற்று பிறவா பேரின்ப அடையவே சித்தர்கள் யோகம், தியான கலைகளை கண்டுபிடித்தனர். அதில் குண்டலினி சக்தியையே குலசுந்தரியாக போற்றி நம் சித்தர்கள் வழிபட்டனர். அந்த குலசுந்தரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதித்து வழிபடுவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்
மந்திரம்:
ஓம் குலஸுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச நவமி, கிருஷ்ண பட்ச சப்தமி.
பலன்கள்: இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.