கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. பல்தான்ஸை பொளந்த சன்ரைசர்ஸ்.. துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 4 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. அதிலும் கடந்த 2 ஆண்டுகளில் அந்த அணியின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மைதானத்தில் எப்போதும் சோகமாக அமர்ந்திருப்பார்.
அதுமட்டுமல்லாமல் அந்த அணியை விடவும் காவ்யா மாறனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இதனிடையே ஜெயிலர் பட விழாவில் ரஜினி பேசும் போது கூட, ஐதராபாத் அணிக்கு நல்ல வீரர்களை வாங்கி போடுங்கள்.. காவ்யாவை சோகமாக
பார்க்க கஷ்டமாக இருப்பதாக கிண்டல் செய்து சென்றார். இதனிடையே எஸ்ஏ20 லீக்கில் ஐதராபாத் அணி தரப்பில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை வாங்கியது.
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, இம்முறை முதல் வெற்றியை பெற முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – மும்பை கேப்டவுன் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது.