கொழுப்பை கரைக்கும் கொத்தமல்லி இலையை தூக்கி எறியிறீங்களா? உங்களுக்கே இந்த பதிவு
கொத்தமல்லி இலைகளில் பல வைட்டமின்கள், சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில் இதன் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி இலையின் சிறப்புகள்
கொத்தமல்லி இலைகள் மணத்திற்கு மட்டுமின்றி சுவையிலும், ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்த இலைகளில் இருக்கும் டிகோனென் என்ற சேர்மம் செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை போக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றது.
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
மேலும் கெட்ட கொழுப்பான LDL கொழுப்புச்சத்தின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பான HDL கொழுப்புச்சத்தின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன.
கொத்தமல்லி இலைகளில் இருக்கும் வைட்டமின் A மற்றும் லுடீன் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கண் நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.