டிக்டோக்கிற்கு அமெரிக்காவிலும் தடை..நிறைவேறிய மசோதா

அமெரிக்காவில் டிக்டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிக்டோக்
சீனாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் ByteDance நிறுவனம் அறிமுகப்படுத்திய செயலி தான் டிக்டோக் (TikTok).

இந்த செயலியை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் 2020யில் தடை விதித்தன. பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே இந்த செயலி தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததும், உளவு நடவடிக்கை என்று சில நடுகல் குற்றம்சாட்டியதுமே இதற்கு காரணம் ஆகும்.

எனினும், டிக்டோக் செயலியின் தலைமை நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது. அமெரிக்காவின் சில மாகாணங்கள் டிக்டோக்கிற்கு தடை விதித்தாலும், நாடு முழுவதும் தடை விதிக்கப்படவில்லை.

தடை மசோதா
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் டிக்டோக் தடை குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, 352 பேர் ஆதரவாகவும், 65 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர்.

அதன் பின்னர் பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னர் தடை செய்யப்படும்.

அமெரிக்காவில் டிக்டோக் செயலி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றால் ByteDance நிறுவனம் அதனை விற்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *