பிக்பாஸுக்கு பின் சோசியல்மீடியா பக்கம் தலைகாட்டாமல் இருந்த டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் முதல் சர்ப்ரைஸ் video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த சீசனில் வெற்றியாளராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் ஜெயித்த முதல் நபர் அர்ச்சனா தான். பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் ரூ.15 லட்சம் மதிப்பிலான வீடும், சொகுசு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த பின்னரும் அர்ச்சனாவை பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அவர் காசு கொடுத்து தான் டைட்டில் வாங்கியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதை சக போட்டியாளர்களே கூறியது தான் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. மறுபுறம் பிக்பாஸ் முடிந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் ஆனாலும் இதுவரை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு கூட போடாமல் உள்ளார்.
இதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அவர் பிக்பாஸ் செல்லும் முன்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராமை கவனிக்கும் பொறுப்பை பிஆர் டீம் ஒன்றிடம் வழங்கியதாகவும், தற்போது அந்த கம்பெனிக்கு பணம் முழுமையாக செலுத்தாத காரணத்தால் அவரது இன்ஸ்டா பக்கம் இன்னும் அவரிடம் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தான் அர்ச்சனா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இல்லை என்றும் பேச்சு அடிபடுகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் முடிந்து வெளியே வந்ததும் அர்ச்சனாவுக்கு அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. வாண வெடிகள் வெடித்தும், கேக் வெட்டியும் அர்ச்சனாவுக்காக அவரது தங்கை செய்திருந்த இந்த சர்ப்ரைஸ் ஏற்பாடுகளை பார்த்து அர்ச்சனாவே வியந்து போனார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.