TN Global Investors Meet: முக்கிய முதலீடுகள் என்னென்ன.. கோயம்புத்தூர், திருநெல்வேலி-க்கு ஜாக்பாட்..!
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 2வது நாள் முடிவில் மொத்தம் ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்று முக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த முதலீடுகள் மூலம் 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், மறைமுக வேலைவாய்ப்புகளையும் சேர்த்து மொத்தமாக, 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.இந்தச் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் அடுத்த 20 ஆண்டுக்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய முதல் இமாலய சாதனை செய்துள்ளார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா-வை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த நிலையில் முதலீட்டாளர் மாநாடு 2024 ஹைலைட்ஸ் ஆக முக்கிய முதலீட்டுத் திட்டங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.- மஹிந்திரா குழுமம் சென்னைக்கு அருகிலுள்ள கும்மிடிப்பூண்டியில் மஹிந்திரா தொழில்துறை பகுதியில் 1,800 கோடி மதிப்பிலான முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.- சுற்றுலா துறையில் எவ்விதமான முதலீடும் பெறாதது வருத்தும் அளிக்கும் விஷயம். இப்பிரிவில் ஹோட்டல், தீம்பார்க் உட்பட பல விஷயங்களில் முதலீடு எதிர்பார்க்கப்பட்டது.- TAFE குழுமம் தமிழ்நாட்டில் ஒரு அதிநவீன வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதியைச் சென்னையில் அமைக்கும்.- சென்னை மற்றும் தூத்துக்குடியில் அடுத்த 2 ஆண்டுகளில் 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்ய SPIC குழுமம் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் உறுதியளித்துள்ளது.- வெல்ஸ்பன் குழுமம் தமிழ்நாட்டில் அடுத்த 4-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது- திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் மற்றும் தேனி மாவட்டங்களில் 300 மெகாவாட் சோலார் மற்றும் 200 மெகாவாட் காற்றாலை திட்டங்களை அமைப்பதற்காக டெல்லியை சேர்ந்த சன்ஷூர் எனர்ஜி நிறுவனம் 3,150 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்ய தமிழக அரசிடம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.- டெல்லியைச் சேர்ந்த ஆட்டோமோட்டிவ் நிறுவனமான ஆனந்த் குழுமம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 987 கோடி மதிப்பிலான முதலீட்டில் வாகன மற்றும் EV உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.