TNGIM: ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டின் நிலை என்ன..? தமிழ்நாடு அரசின் சிஸ்டம்.. வெறும் 30 நாளில் சக்சஸ்..!
தமிழ்நாடு அரசு ஜனவரி மாதம் நடத்திய உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களையும், 26 லட்சம் வேலைவாய்ப்புகளை ஈர்த்த வெற்றியில், மாநில அரசு இப்போது அவற்றை உண்மையான முதலீடாக மாற்ற வேண்டிய முக்கியமான சவலைகளை எதிர்கொண்டு உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்கள் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒவ்வொரு வருடமும் நடத்தும் வழக்கத்தைக் கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல், பிற மாநிலத்தை விடவும் அதிகப்படியான முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்ற போட்டியில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைப் பெற்ற வெறுமெனப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பெறுகிறது.
இத்தகைய உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரும் முதலீட்டு ஒப்பந்தங்களைப் பெரும்பாலானவை உண்மையான முதலீடாக மாறுவது இல்லை. சொல்லப்போனால் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10-20 சதவீதம் வெற்றி அடைந்தால் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படும் நிலை தான் உள்ளது.
ஆனாள் தமிழ்நாடு அரசு இந்த முறை உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 60 முதல் 70 சதவீதம் வரையில் சக்சஸ் ரேட் இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையை அடைய நிறுவனங்களின் நிதி நிலை எந்த அளவுக்கு வலிமையாக இருக்கிறதோ அதே அளவுக்கு அரசின் செயல்பாடுகளும் வேகமாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் தான் தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு விவேகமாகச் செயல்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டியதாக உள்ளது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பூமி பூஜை போடும் அளவுக்கு வர தமிழக அரசு வணிகம் தொடர்பான அனைத்து ஒப்புதல்கள், உரிமங்கள், அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களை மின்னணு முறையில் ஒற்றைச் சாளர தளத்திலும், ஒன்-ஸ்டாப் போர்டல் மூலம் விரைவான அனுமதியை, எவ்விதமான தங்கு தடையுமின்றி முதலீட்டாளர்களுக்கு அளிப்பதில் அரசு கவனம் செலுத்த உள்ளது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு ஒற்றைச் சாளரம் மூலம் விரைவான அனுமதி வழங்கப்படும் என்று ஏற்கனவே தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதி அளித்துள்ளார்.
இந்த டிஜிட்டல் போர்ட்டலின் கீழ் சுமார் 25 துறைகள் மூலம் மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் எந்தவொரு முதலீட்டாளரும் 170 அனுமதிகளைப் பெறலாம் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகிறார்.
விரைவான அனுமதிகள் கிடைப்பதில் தான் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். பெரும்பாலான தொழில்துறை மற்றும் நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அனைத்து அனுமதிகளுடன் தமிழ்நாட்டில் செயல்படத் தொடங்குகின்றன.
மற்றொரு முக்கியப் பிரச்சினை நிலம் கிடைப்பது. நிலம் குவிக்கும் திட்டத்தை (land pooling scheme) செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு சுமார் 3 லட்சம் கோடி முதலீடுகளையும், இதன் மூலம் 4.15 லட்சம் வேலைகளையும் ஈர்த்துள்ளது என்று அமைச்சர் டிஆர்பிஐ ராஜா கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில் முந்தைய அரசின் போது மாநிலத்தின் எளிதாகத் தொழில் தொடங்கும் (EODB) தரவரிசையில் தமிழ்நாடு மோசமாக இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். தற்போது, திராவிட மாடல் அட்சியில், EODB தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.