TNGIM2024: முத்து முத்தா 3 முதலீடு.. ஒரு மணிநேரத்தில் சென்னை, ஓசூரில் குவிந்த முதலீடு..!!
தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு ஆரம்பமே அதிரடி என்ற வகையில் துவங்கிய ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து முக்கிய முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெலியாகியுள்ளது.டாடா எலக்ட்ரானிக்ஸ் தமிழகத்தில் ₹12,082 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும், பெகாட்ரான் ₹1,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், டிவிஎஸ் நிறுவனம் அதன் விரிவாக்கத் திட்டங்களுக்காக ₹5000 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அறிவித்துத் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ்: தமிழ்நாட்டில் ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் பெரும் உந்துசக்தியாக இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள தனது மாபெரும் தொழிற்சாலையில் 12,082 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கத் திட்டங்களைச் செய்யத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.பெகாட்ரன்: சென்னையில் பாக்ஸ்கான்-க்கு அடுத்தபடியாக பெரிய ஐபோன் தொழிற்சாலையாக இருக்கும் பெகாட்ரன் தனது சென்னை தொழிற்சாலையைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் வேளையில் ஐபோன் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியை மேம்படுத்த 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.டிவிஎஸ்: தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் துறையின் அடையாளமாக விளங்கும் டிவிஎஸ் நிறுவனம் தனது வாகன உற்பத்தியின் விரிவாக்கத்திற்காக இந்நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இன்று தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ், Pegatron, TVS, Hyundai, JSW, Ashok Leyland, AP Miller Maersk மற்றும் Mitsubishi ஆகிய நிறுவனங்கள் இன்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.