TNPL Auction 2024: டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட சாய் கிஷோர்!
சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், டி நடராஜன், சந்தீப் வாரியர், சாய் கிஷோர், அபிஷேக் தன்வர், சஞ்சய் யாதவ், சரவணக் குமார் ஆகியோர் கீ பிளேயர்ஸ்களாக திகழ்கின்றனர். இவர்களை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணியும் கடுமையாக போட்டி போட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் ஆல்ரவுண்டரான சாய் கிஷோருக்கு அடிப்படை விலையாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இதுவரையில் 9 டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடிய சாய் கிஷோர் 233 ரன்களும் 18 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். சாய் கிஷோரை ஏலம் எடுக்க ஐட்ரீம் மற்றும் சேப்பாக் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது.
ஐட்ரீம் 19 லட்சத்திற்கு ஏலம் கேட்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ரூ.19.25 லட்சத்திற்கு ஏலம் கேட்டது. இதையடுத்து ஐட்ரீம் திரும்பவும் ரூ.19.75க்கு ஏலம் கேட்டது. இதையடுத்து சூப்பர் கில்லீஸ் ரூ.20.75க்கு ஏலம் கேட்டது. இப்படியே இரு அணிகளும் மாறி மாறி ஏலம் கேட்டுக் கொண்டே இருந்தனர். கடைசியாக ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது ரூ.22 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
இதுவரையில் எந்த வீரரும் ரூ.21.6 லட்சத்திற்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டதில்லை. கடந்த சீசனில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக ரூ.21.6 லட்சத்திற்கு லைகா கோவை கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இதுவே அதிகபட்ச தொகையாக இருந்தது. இந்த நிலையில் தான் முதல் முறையாக டிஎன்பிஎல் வரலாற்றில் சாய் கிஷோர் ரூ.22 லட்சத்திற்கு ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.