கோடிகளில் பணம் சேர… 48 நாட்கள் இப்படி விளக்கேற்றுங்கள்- நினைத்தது கைகூடும்

பொதுவாகவே அனைவருக்கும் கடன் சுமைகள் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் ஆசை.

இவ்வளவு காலமாக உங்களிடம் சேராத பணம், தங்கம் என அனைத்து விதமான ஐஸ்வரியங்களும் உங்களிடம் சேருவதற்கு நீங்கள் ஒரு விளக்கை மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றினால் போதும்.

நீங்கள் எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்தீர்களா அவ்வளவு பணம் மற்றும் சொத்து சுகங்களையும் சேர்க்கலாம்.

அது மட்டும் இன்றி உங்களுக்கு முந்தைய தலைமுறைகள் சம்பாரிக்க நினைத்த பணம், சொத்து சுகங்களை கூட இந்த தலைமுறையிலேயே நீங்கள் சேர்ப்பதற்கு இந்த விளக்கு ஏற்றினாலே போதும்.இந்த விளக்கை ஏற்றும் முறை குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

பரிகாரம் செய்ய தேவையானவை
ஒரு தாம்பூல தட்டு முக்கியமாக தேவை. அது பித்தளையால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டியது.

அந்தப் பித்தளை தட்டின் நடுவில் மண்ணால் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கை வைத்து அதை சுற்றியும் காம்புகள் உடையாமல் மூன்று காய்ந்த மிளகாய் வைக்க வேண்டும், ஒடுகள் உடையாமல் கொட்டையுடன் இருக்கும் புளியபழத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

இதனுடன் ஒரு கைப்பிடி பச்சரிசி மற்றும் ஒரு கைப்பிடி கல் உப்பு வைக்க வேண்டும். இந்த பொருட்கள் எல்லாம் தேவைப்படும்.

அதுவும் நான் சொன்னது போல் வைத்துக் கொள்ளுங்கள். தீபம் ஏற்றும் நேரம் இப்படி மேலே சொன்னபடி பொருட்களை தாம்பூல தட்டில் வைத்து அலங்காரம் செய்துவிட்டு. உங்கள் வீட்டின் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும்.

இப்படி 48 நாட்கள் தொடர்ந்து இந்த தீபம் ஏற்றும் போது சில நேரங்களில் பெண்களால் ஏற்ற முடியாத பட்சத்தில் வீட்டில் உள்ள ஆண்கள் இந்த விளக்கை ஏற்றலாம். இதனை அதிகாலை நேரத்தில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.

இந்த நேரத்தில் விளக்கேற்ற முடியாதவர்கள் மலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஏற்றலாம்.இந்த பரிகாரத்தின் போது விளக்கில் உள்ள எண்ணெய் மற்றும் திரியை மாத்திரம் தினமும் மாற்றினால் போதும் ஏனைய பொருட்களை மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

ஏனைய பொருட்களில் ஏதாவது ஒரு பொருள் பூஞ்சை பிடித்தாலோ அல்லது தூசு பட்டு மாற்றமமைந்தாலோ மாத்திரம் மாற்றி வைக்கலாம்.இந்த பரிகாரத்தை தொடர்ந்த 48 நாட்கள் செய்து வந்தால் வாழ்வில் நினைத்து கூட பார்க்காத அளவுக்கு செல்வம் பெருகும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *