தனது பாவங்களை போக்குவதற்காக மோடி ராமர் கோவில் திறந்தார்: மாணிக்கம் தாகூர் காட்டம்
மதுரை அருகே அவனியாபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தனது பாவங்களை போக்குவதற்காக புனித நீரையும், ராமர் கோவிலையும் திறந்து வைத்துள்ளார்.
ராமர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நினைக்கிறார்.
ஆனால் இந்த தேர்தல் மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி நடைபெற உள்ளது.வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்தியாவுக்கு புதிய சுதந்திரம் வரும்.
வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கிய மோடி, மதவெறியை பரப்பிய ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவை பாதுகாப்பற்றதாக மாற்றிய அமித் ஷா ஆகியோரின் இந்திய கூட்டணி வரும் தேர்தலில் முடிவுக்கு வரும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வலியுறுத்தியும் மீனவர்கள் பிடிபடுவதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
3 மாத சிறைவாசத்திற்குப் பிறகு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.ஆனால், தாங்களாகவே விடுவித்தவர்கள் போல் தொடர்ந்து பேசி வருகின்றனர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஆட்சி மாற்றம் வர வேண்டும்.