மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது.. கடிவாளம் போட்ட மத்திய அரசு.!!!
போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது என பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது.
காலை வேளைகளில் முன்கூட்டியும், மாலையில் அதிக நேரம் கடந்தும் வகுப்புகளை நடத்தக்கூடாது. ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது.
மேலும், பெற்றோர்களை தவறாக வழிநடத்துவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்பட முறைகேடுகளில் ஈடுபட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது கோச்சிங் சென்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரித்துள்ளது. பண்டிகைகள், திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தால் அடுத்த நாளில் தேர்வுகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது