தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட… தினம் 15 நிமிட யோகா போதும்!
தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தற்போது, தைராய்டு பிரச்சனை மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. தைராய்டு நோய்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான ஹார்மோன்கள் உற்பத்தி நிலை, மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என்னும் அதிக ஹார்மோன்கள் உற்பத்தி நிலை ஆகும்.
தைராய்டு சுரப்பியின் வேலை தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்வதாகும், இது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மற்றும் ஆற்றல் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, தைராய்டு ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
1. இந்த ஆசனத்தை செய்ய, முதலில் தரையில் குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள்.
2. உங்கள் முழங்கைகளை உங்கள் இடுப்புக்கு நெருக்கமாகவும் உள்ளங்கைகளை மேல்நோக்கியும் வைக்கவும்.
3. இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் மார்பை மேல்நோக்கி உயர்த்தவும்.
4. அதன் பிறகு மெதுவாக உங்கள் வயிற்றை உயர்த்தவும்.
5. இந்த நிலையில் 30-50 வினாடிகள் இருக்கவும்.
6. இப்போது மூச்சை வெளியேற்றும் போது, மெதுவாக உங்கள் தலையை தரையை நோக்கி தாழ்த்தவும்.
7. இந்த செயல்முறையை 3-5 முறை செய்யவும்.