வீக்னெஸ் இல்லாத அவரிடம் ஈகோவுடன் விளையாடி அவுட்டாக்குங்க.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அட்வைஸ்
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.
அதற்கு பதிலடியாக இரண்டாவது போட்டியில் வென்ற இந்திய அணி தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சொந்த மண்ணிலேயே கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக செயல்பட்டு இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் வெறும் 22 வயதாகும் யசஸ்வி ஜெய்ஸ்வால் இத்தொடரின் முதல் போட்டியிலேயே அதிரடியாக 80 (76) ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார். அதை விட இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய அவர் இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக திகழ்ந்தார்.
ஈகோவுடன் மோதுங்க:
அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் தற்சமயத்தில் எளிதாக அவுட்டாகும் அளவுக்கு ஜெய்ஸ்வால் எந்த பலவீனத்தையும் கொண்டிருக்கவில்லை என முன்னாள் இங்கிலாந்து அந்த வீரர் டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.