முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?
நம் முன்னோர்கள் தங்களின் தலைமுடிக்கு சீகைக்காயைத் தான் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது சீகைக்காயின் பயன்பாடு குறைந்து, மாறாக ஷாம்புவைத் தான் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி கெமிக்கல் அதிகம் கலந்த ஷாம்புவைப் பயன்படுத்துவதால் தான் என்னவோ, நிறைய முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது? சீகைக்காய் ஓர் அற்புதமான மூலிகை. இதனைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இதனைக் கொண்டு ஷாம்பு தயாரிக்கலாம் அல்லது ஹேர் பேக் கூட தயாரிக்கலாம். இந்த ஷாம்பு மற்றும் ஹேர் பேக்குகளைத் தயாரிக்கும் முன், சீகைக்காயினால் நம் தலைமுடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
பட்டுப்போன்ற தலைமுடி சீகைக்காய் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். அதிலும் சீகைக்காயை ஹேர் பேக் செய்து தலைக்கு பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, ஸ்கால்ப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.
பொடுகைப் போக்கும் சீகைக்காயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே பொடுகுப் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் தங்களின் தலைமுடிக்கு சீகைக்காயைப் பயன்படுத்தி வந்தால், விரைவில் போக்கலாம்.
அடர்த்தியான முடி சீகைக்காய் தலைமுடியின் மயிர்கால்களை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். எனவே உங்களுக்கு தலைமுடி அடர்த்தியாக வேண்டுமானால், சீகைக்காயை உலர வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, அந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால், தலைமுடி வலிமையாகி முடி உதிர்வது குறையும்.
சீகைக்காய் ஷாம்பு செய்வது எப்படி? இரவில் படுக்கும் போது சீகைக்காய், பூந்திக் கொட்டை மற்றும் உலர்ந்த நெல்லி ஆகியவற்றை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அவற்றை அடுப்பில் வைத்து, அப்பொருட்கள் மென்மையாகும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர வைத்து அரைத்தால், சீகைக்காய் ஷாம்பு தயார்.