மண் தரத்தை அதிகரிக்க, அதிக கால்சியம் தேவைப்படும் தாவரங்களுக்கு பொடித்த முட்டை ஓடு
முட்டை ஓடுகளை, இயற்கை உரமாகவும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு தாவரத்தின் செல் சுவர்களை உருவாக்க கால்சியம் அவசியம். உங்கள் தாவரங்கள் மற்றும் மண்ணின் கால்சியம் உள்ளடக்கத்தை இயற்கையாக அதிகரிக்க, முட்டை ஓடுகள் சிறந்த வழியாகும்.
முட்டை, புரதம் நிறைந்ததாக அறியப்படுகிறது. ஒரு முட்டையில் 6-7 கிராம் புரதம் உள்ளது. எனவே ஓடுகளை தூக்கி எறியாமல், அவற்றை நசுக்கி, செடிகளுக்கு இயற்கை உரமாக பயன்படுத்தலாம்.
நல்ல காற்றோட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகம் ஆகியவை வேர் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து விநியோகத்திற்கு இன்றியமையாதவை, முட்டை ஓடுகள் உங்கள் மண்ணின் அமிலத்தன்மையைக் குறைத்து, அதை காற்றோட்டமாக்க உதவும்.
குறைந்த pH என்றால் உங்கள் மண் அமிலமானது. பல பொதுவான காய்கறி செடிகளுக்கு இது ஒரு பிரச்சனை. சில தாவரங்கள் அமில மண்ணை விரும்புகின்றன, ஆனால் பலவற்றுக்கு அப்படி இல்லை.
மண்ணின் pH ஐ அதிகரிக்க, பொடித்த முட்டை ஓடுகளை தாராளமாக பரப்பி, அவற்றை உங்கள் மண்ணில் கலக்கவும்.
முட்டை ஓடு உரமானது, அதிக கால்சியம் தேவைப்படும் தாவரங்களுக்கும், அதிக அளவு உணவு கால்சியத்தின் ஆதாரமாக இருக்கும் தாவரங்களுக்கும் மிகவும் நல்லது.
தக்காளி, கத்திரிக்காய், மிளகுத்தூள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், சார்ட் மற்றும் கீரை ஆகியவை இதில் அடங்கும்.
அதை நசுக்கி, பொடி செய்து, அல்லது தண்ணீரில் சேர்த்து ஊற்றலாம்.
உங்கள் தோட்டத்திற்கு கூடுதல் ஊட்டமளிக்க, நைட்ரஜனின் வளமான ஆதாரமாக இருக்கும் பயன்படுத்திய காபி பொடியுடன் முட்டை ஓடு பொடியை 1:1 என்ற அளவில் கலக்கவும்.
இனி வீட்டில் முட்டை சமைத்தால் அதன் ஓடுகளை தூக்கி எறியாதீங்க. உங்க தோட்டச் செடிகளுக்கு நல்ல உரமா இப்படி பயன்படுத்துங்க.