மாரடைப்பு வராமல் தடுக்க… இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

அதனால் தான், முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்தியை அடிக்க கேட்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கெட்ட கொழுப்பின் அளவை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது இதயத்தை மோசமாக பாதிக்கும் என்பதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும். இப்படிப்பட்ட நிலையில், உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். அப்படிப்பட்ட சில ஆயுர்வேத வைத்தியங்களைப் (Ayurvedic Remedies For High Cholesterol) பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இங்கே குறிப்பிட்டுள்ள உணவுகள் சில நாட்களிலேயே, உடலின் நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலும் வெளியேற்றும். இது மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். ஆயுர்வேத வைத்தியத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பற்றி தெரிந்து கொள்வோம்…!

இஞ்சி – தேன்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அதனை ஒத்த பல பண்புகள் தேனில் காணப்படுகின்றன, இது கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) இதய தமனிகளில் சேருவதை தடுக்க உதவுகிறது. இதற்கு ஒரு கப் வெந்நீரில் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் ஆப்பிள் வினிகர் கலந்து குடிக்கலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக (Health Tips) வைத்திருக்கவும் பெரிதும் உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை வெதுவெதுப்பான நீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். உண்மையில், இந்த கலவை உங்கள் உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

பூண்டு

பூண்டில் கந்தகம் உள்ள நிலையில், இது ரத்தத்தை மெலிதக்கி கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு 6-8 பூண்டு பற்களை அரைத்து ஒரு கப் பால் மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இந்த கலவை மிகவும் உதவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *