அரசியல் கட்சியாக பதிவு செய்ய டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்கம?

நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் அன்புமணி ராமதாஸ், சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார் நடிகர் விஜய்.

தற்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நேற்று திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நடிகர் விஜய் தலைமையில் பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என ஆலோசனை நடத்திய விஜய் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *