“கில்லை காப்பாற்ற.. ரோகித் சர்மா இதை செய்தே ஆகனும்.. வேற வழியில்ல” – வாசிம் ஜாபர் கட்டாய கோரிக்கை
தற்பொழுது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் சற்று அனுபவம் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இருவரது இடமும் கேள்விக்குறியாகி வருகிறது.
இவர்கள் இருவரும் கடந்த 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
சுப்மன் கில் 0, 23, 10, 36, 26, 2, 29, 10, 6, 18, 13, ஷ்ரேயாஸ் லியர் 13, 35, 4, 0, 6, 31, 26, 0, 4, 12, 29* என்பதாக இவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விபரங்கள் கடைசி 11 இன்னிங்ஸ்களில் மிக மோசமாக இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு இந்த இரண்டு பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் செயல்பாடு முக்கியமான காரணமாக அமைகிறது.
இருவருமே முதல் போட்டியில் நல்ல துவக்கம் கிடைத்து அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இரண்டாவது போட்டியில் கில் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் இரட்டை மனநிலையில் விளையாடி மலிவான முறையில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே மாற்றங்கள் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக விராட் கோலி இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதாக கருத்துக்கள் நிறைய வருகிறது.