கடன் பிரச்சினை தீர.. சனியிடமிருந்து தப்பிக்க.. எந்த தினத்தில் பைரவரை வணங்கலாம்..!!
சிவபெருமானின் அவதாரங்களில் ஒன்றுதான் பைரவர் என்பது பலருக்கும் தெரியும். பைரவரை வணங்குவதன் மூலம் பயம் நீங்கி தைரியம் அதிகரிக்கும்.
காரிய வெற்றி ஏற்படும். அதே போன்று சனிபகவானின் குருவாக பைரவர் விளங்குவதால் சனிபகவானின் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
பைரவரை மற்ற கிழமைகளை காட்டிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்குவது சிறப்பு. சனிக்கிழமை பைரவரை வணங்கினால் அஷ்டம சனி, ஏழரைச் சனி, அஷ்டார்த்தம சனி போன்ற சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு உகந்த நாள் என்று கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அன்று செவ்வரளி மலர்கள் வைத்து பைரவ காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அவருக்கு பிடித்தமான நெய் வைத்தியங்களை வைத்து வழிபடுவதன் மூலம் கடன் பிரச்சனையில் இருப்பவர்கள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற சிக்கல்களில் சிக்கி இருப்பவர்கள், சனி திசை நடப்பவர்கள், தொழிலில் பாதிப்புகளை சந்திப்பவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.