Today Gold Rate in Chennai : அப்பாடா! நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது.!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,720க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,840-க்கு விற்பனையானது.

இன்றைய (பிப்ரவரி 13) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,480-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,810-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,280ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.50,240-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.77.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *